திமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் அமைச்சர் படிவங்களை வழங்கினார்.

Published Date: April 10, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகர் மாவட்டம், எல்லிஸ் நகர் பகுதி திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற உறுப்பினர் சேர்க்கை குறித்த கூட்டம்,எஸ்.எஸ் காலனி பகுதியில் நேற்று நடந்தது.

புதிய உறுப்பினர் சேர்க்கை காண படிவங்களை வழங்கி மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும்,  நிதி அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் பேசினார். இக்கூட்டத்தில், கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்த்தல் பணிகளை பார்வையிட தலைமைக்கழகத்தால் மத்திய சட்டப்பேரவை தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுச் செயலாளர் டாக்டர் சுந்தரராஜ், பகுதி செயலாளர் பி.கே. செந்தில் மற்றும் பகுதி வட்டப் பொறுப்பாளர்கள்,  திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Media: The Hindu